சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த தமிழக குடும்பம் - சொந்த ஊர் வந்த உடல்களை கண்டு கதறிய மக்கள்

x

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேரின்

உடல்கள் அவர்களது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி மற்றும் இரு மகள்கள் உடன் காரில் திருப்பதியில் நடைபெற இருந்த திருமணத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டதால், நான்கு பேரும் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நால்வரின் உடல்களும் சொந்த ஊரான பாரண்டப்பள்ளிக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்