பிரதமர் பாராட்டிய - சென்னை ஆட்டோ டிரைவர் - 25 வருஷமா...

x

மனதின் குரல் நிகழ்ச்சியின் 105வது எபிசோடில் பேசிய பிரதமர் மோடி, 'சந்திரயான் 3' விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியதும், ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதும் இந்தியாவின் சாதனைகள் என்றார். 'சந்திரயான் 3' விண்கலம் நிலவில் இறங்கிய காட்சிகளை 'இஸ்ரோ'வின் யூடியூப் சேனல் மூலமாக 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்ததாகவும், இது இந்தியர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சுற்றுலாத்துறை குறைந்த முதலீட்டில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக குறிப்பிட்ட பிரதமர், ஜி20 பிரதிநிதிகளின் வருகை சுற்றுலாத்துறையை மேலும் விரிவுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து நாட்டில் வன உயிரிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை பாராட்டி பேசிய அவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திர பிரசாத், 25 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட புறாக்களுக்கு உணவளித்து பராமரித்து வருவதை பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்