

குஜராத் மாநிலம் சூரத்தில், தறிகெட்டு ஓடிய கார், சாலையோரத்தில் நின்ற இருசக்கரவாகனங்கள் மீது மோதி, தீப்பற்றி எரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், காருக்குள் இருந்த பெண் உள்ளிட்டோரை அப்பகுதி மக்கள் மீட்டனர். நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.