Supreme Court | நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த விவகாரம்-அதிரடியாக சொன்ன சுப்ரீம் கோர்ட்

x

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிபதிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி அபய் எஸ் ஒகா இந்த விவகாரத்தில் உரிய சட்ட விதிகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பின்பற்றி உள்ளதாகவும், விசாரணை அறிக்கையை பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்துள்ளதால் வழக்கு பதிய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்