Supreme Court | ``அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது’’ உச்சநீதிமன்றம் அதிரடி
Supreme Court | ``அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது’’ உச்சநீதிமன்றம் அதிரடி
"மதக் கூட்டங்கள், அறக்கொடை செயல்கள் சட்டப்படி குற்றமாகாது"
மதக் கூடுகைகளோ அறக்கொடை செயல்களோ உ.பி. மதமாற்ற தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் படி குற்றமாகது- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
மதக் கூடுகைகளோ அறக்கொடை செயல்களோ உத்தரப் பிரதேச மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் குற்றங்களாகாது எனத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், சாம் ஹிக்கிபாதம் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திர பிகாரி லாலுக்கு எதிரான வழக்குகளையும் ரத்து செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மதமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்துச் செய்யக் கோரி ராஜேந்திர பிகாரி லால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஸ் மிஸ்ரா அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் புகார் அளிக்கவில்லை என்றும், சாட்சியங்களின் வாக்குமூலம் மதக் கூட்டம் நடத்தப்பட்டதையும், பைபிள் போதிக்கப்பட்டதையும் மட்டுமே தெரிவித்துள்ளது. மதமாற்ற குற்றச்சாட்டு இல்லை என்றும் மதக் கூடுகைகளோ அறக்கொடை செயல்களோ உத்தரப் பிரதேச மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் படியோ, இந்திய தண்டனை சட்டப்படியோ குற்றங்களாகது என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
