முடிவுக்கு வந்த பல நாள் போராட்டம்... சாம்சங் ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. சாம்சங் நிர்வாகம் சார்பில் எழுத்துப் பூர்வமாக அறிவிப்பு வந்தால் போராட்டத்தை முடித்துக் கொள்வோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 23 பேர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் ஊதியம் மற்றும் நாளை முதல் குழுக்களாக அவரவர் மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பபட்டு பயிற்சி வழங்கி அதன் பிறகு பணியில் சேர்க்கப்படுவார்கள் எனவும் சாம்சங் நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர்.
Next Story
