தேர்வில் காப்பி அடித்ததாக குற்றச்சாட்டு - மாணவி தற்கொலை

x

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் தேர்வில் காப்பி அடுத்ததாக குற்றம்சாட்டபட்டதால் வேதனையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தேஜஸ்வினி என்ற மாணவி செய்முறைத் தேர்வில் காப்பி அடித்ததாக பள்ளி நிர்வாகத்தினர், சிசிடிவி காட்சியை பெற்றோருக்கு காட்டியுள்ளனர். இதனால் வேதனையில் இருந்த மாணவி நீண்ட நேரம் வீட்டிற்கு வராததால் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் முதோல் பகுதியில் உள்ள ஏரியில் மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்