திடீரென கேட்ட பயங்கர சத்தம்.. மேம்பாலத்தில் இருந்து ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக விழுந்த கார்

x

டெல்லியில் இளைஞர் ஒருவர் ஓட்டிவந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பாலத்தில் இருந்து, ரயில் தண்டாவளத்தில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியின், முக்கர்பா செளக் பகுதி மேம்பாலத்தில், இளைஞர் ஒருவர் ஒட்டி வந்த கார், மேம்பாலத்தில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கீழே இருந்த ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்