Delhi flight | 2 விமானங்களில் திடீர் கோளாறு..தவிர்க்கப்பட்ட பெரும் `விபத்து' - தப்பித்த உயிர்கள்
டெல்லியில் இருந்து லேவுக்கு சென்ற இண்டிகோ விமானம் தரையிறங்குவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.
டெல்லியில் விமானம் தேவையான பராமரிப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்-திருப்பதி இடையிலான ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து காலை 6.10 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் SG 2696, காலை 6.19 மணிக்குப் புறப்பட்டு, காலை 7.40 மணிக்கு திருப்பதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அது புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்பி ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலேயே தரையிறங்கியுள்ளது.
