Kerala || Sabarimala ||பம்பை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஷாக்கில் ஐயப்ப பக்தர்கள்..
கேரளாவில், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பூஜைக்காக ஐயப்பன் கோயிலின் நடை திறந்திருப்பதால் அதிக அளவில் பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். தற்போது, சபரிமலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பம்பை நதியில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தால் போதிய முன்னேற்பாடுகள் செய்வதற்காக அதிகாரிகள், கண்காணித்து வருகின்றனர்.
Next Story
