திடீரென பற்றிய 'தீ'.. மளமளவென எரிந்த தொழிற்சாலை - பதறவைக்கும் காட்சி

மேற்கு வங்க மாநிலம் பல்பாரா பகுதியில் உள்ள பினாயில் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள அந்த பினாயில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வேதி பொருட்கள் பற்றி எரிந்ததால் அப்பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது. அங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

X

Thanthi TV
www.thanthitv.com