ஏழுமலையானுக்கு இப்படியும் ஒரு தீவிர பக்தரா? - கற்பனைல கூடநினைக்காத காணிக்கை
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை
ஆந்திராவில் தொழிலதிபர் ஒருவர் ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக தாம் தொழில் தொடங்கிய நிலையில், அதில் 7 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்ததால் 60 சதவீத பங்கை விற்று தங்க காணிக்கை செய்ய அந்தத் தொழிலதிபர் முடிவு செய்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஏழுமலையானுக்கு தினமும் 120 கிலோ எடை தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகிறது. அதை விட கூடுதலாக 140 கோடி ரூபாய் மதிப்பில் 121 கிலோ தங்கத்தை அந்த பக்தர் அர்ப்பணிப்பதாக கூறப்படுகிறது.
Next Story
