கிளம்பும் கடைசி நேரத்தில் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்ட சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் - காரணம் என்ன?

x

சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் ஆக்ஸியம்-4 திட்டம், அமெரிக்காவின்

ஃபுளோரிடாவில் நிலவும் அசாதாரண வானிலையால், ஜூன் 11ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமும், இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷி சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களை இன்று மாலை இந்திய நேரப்படி 5.52 மணிக்கு பால்கான் 9 ராக்கெட் க்ரு டிராகன் விண்கலத்தில் அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், வானிலை மாற்றம் காரணமாக நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்