தண்டவாளத்தில் வந்து நின்ற மாணவி - ரயில் மோதி உயிரிழப்பு

தண்டவாளத்தில் வந்து நின்ற மாணவி - ரயில் மோதி உயிரிழப்பு
x

உத்தர பிரதேச மாநிலத்தில் மூடி இருந்த ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற கல்லூரி மாணவி, ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். மணிப்பூர் பகுதியில் ரயில் கடந்து செல்வதற்காக, ரயில்வே கிராசிங் கேட் மூடப்பட்டிருந்தது. அப்போது சைக்கிளை தள்ளியவாறு இருப்பு பாதையை கடக்க முயன்ற 19 வயது கல்லூரி மாணவி, ரயில் வருவதை கண்டு செய்வதறியாமல் குழம்பி பாதியிலேயே நின்றார். மின்னல் வேகத்தில் வந்த ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தோடு இவ்வாறு செய்தாரா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்