கிரண்பேடி வெளியேறும் வரை போராட்டம் -காங். கட்சிக்கு நமச்சிவாயம் துரோகம்

பதவி சுகம் அனுபவித்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும், கட்சியை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கிரண்பேடி வெளியேறும் வரை போராட்டம் -காங். கட்சிக்கு நமச்சிவாயம் துரோகம்
Published on

பதவி சுகம் அனுபவித்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும், கட்சியை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரசுக்கு எதிராக செயல்படுவதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது குற்றம்சாட்டிய அவர், மணவெளி தொகுதியில் நடந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றார். அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கையெழுத்து போட்டனர். துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை, மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com