

மாநிலங்களவை மரபுகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை தலைவர் வெங்கைய்ய நாயுடு எச்சரிக்கை செய்தார். அவைக்கு பதாகைகள் முகமூடி ஏர்-ப்யூரிபையர் போன்றவற்றை கொண்டுவருவது தடை செய்யப்பட்டது என்று உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.வரும் காலங்களில் இது போன்ற பொருட்களை கொண்டுவந்து அவையின் மரபுகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.