தெருநாய்கள் கழுத்தில் QR கோடு - என்ன காரணம்?.. அதிகாரிகள் அதிரடி

x

ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம், சிம்லாவில் தெருநாய்களுக்கு GPS கருவி பொருத்தும் பணிகளும், கருத்தடை மருந்துகள் அளிக்கும் பணிகள் தொடங்கின. சிம்லா மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து அவைகளுக்கு QR கோடுகள் உடனான GPS கருவிகளை கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் அதிகாரிகள் பொருத்தி வருகின்றனர். குறிப்பாக தெருநாய்களுக்கு கருத்தடை மருந்துகளும், ரேபிஸ் நோய் பாதிப்பைத் தடுக்கும் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. சமீபத்தில், தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அம்மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்