அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல்... கேரளா - கன்னியாகுமரிக்கு எச்சரிக்கை

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல்... கேரளா - கன்னியாகுமரிக்கு எச்சரிக்கை
Published on

அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல்... கேரளா - கன்னியாகுமரிக்கு எச்சரிக்கை

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.கேரளா மற்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மற்றும் கன மழை பெய்து வருகிறது. கேரளாவில் கன மழை காரணமாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அச்சன்கோயில், மணிமலையார் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி ஆறுகளில் வெள்ள நீர் செல்வதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவரம்பு பகுதியில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com