" டெல்லியில் 3 நாட்கள் தங்கினாலே நோய்த்தொற்று" - நிதின் கட்கரி அதிர்ச்சி தகவல்
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், டெல்லியில் மூன்று நாட்கள் தங்கினால் நோய் தொற்று ஏற்படும் என்று கூறினார். மேலும், மருத்துவ ஆய்வறிக்கை ஒன்றை சுட்டி காட்டிய நிதின் கட்கரி டெல்லியில் நிலவும் காற்று மாசு ஒருவரின் வாழ்நாளை 10 ஆண்டுகள் குறைக்கும் எனவும் தெரிவித்தார். காற்று மாசு படுவதை தடுக்க சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.
Next Story