இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளதால் மீனவர்கள் அதிர்ச்சி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் இருக்கும் தமிழக மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளதால், மீனவர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளதால் மீனவர்கள் அதிர்ச்சி
Published on
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 10 படகுகளை விடுவிப்பதாக, அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த நிலையில், விடுவிக்கப்பட்ட படகுகள் இந்தியா கொண்டுவருவதற்கு ஏற்றதாக உள்ளதா? என மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் மீனவர்கள் யாழ்பாணம் காரை நகருக்கு சென்று படகுகளை பார்வையிட்டனர். அப்போது ஒருசில படகுகள் தவிர, மற்ற அனைத்து படகுகளும் சேதமடைந்திருப்பது தெரியவந்தது. இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை வடபகுதி மீனவர்கள், போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
X

Thanthi TV
www.thanthitv.com