123 இந்திய படகுகளை கடலுக்குள் போட இலங்கை முடிவு
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 123 இந்திய படகுகளை கடலுக்குள் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ், மயிலிட்டி துறைமுகத்தில் இந்திய படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் படகுகள் நிற்பதால் உள்ளூர் மீனவர்கள், தங்கள் படகுகளை நிறுத்துவதில் பெரிய இடர்பாடுகளை சந்தித்து வருவதாகவும் கூறியுள்ள அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி கிடைத்ததும் இந்தியப் படகுகளை கடலுக்குள் போட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
Next Story
