சீறி பாய்ந்த கார்... மடக்கிய போலீசுக்கு ஷாக்... உள்ளே இருந்தது என்ன..?
கேரளாவில் காரில் கொண்டு செல்லப்பட்ட கணக்கில் வராத எழுபத்தி ஒன்பது லட்சத்து எண்பதாயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அத்திக்கோட்டில் போலீசார் போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கோவையில் இருந்து ஆலப்புழா சென்ற காரை போலீசார் சோதனை செய்ததில், காரில் 79 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. மேலும் பணத்திற்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் போலீசார் விசாரித்துள்ளனர். இந்நிலையில் காரில் இருந்தவர்கள் சரியான பதிலளிகாததால் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், காரிலிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மனோஜ், சூர்ய மனோஜ் கிருஷ்ணா, ராம்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
Next Story
