யேசுதாஸ் பெயரில் சிறப்பு பூஜை, யாகம்... சபரிமலை தேவசம்போர்டு கெளரவம்

யேசுதாஸ் பெயரில் சிறப்பு பூஜை, யாகம்... சபரிமலை தேவசம்போர்டு கெளரவம்
Published on

பின்னணி பாடகர் யேசுதாஸ் பிறந்தநாளையொட்டி, சபரிமலையில் சிறப்பு பூஜை மற்றும் நெய்யபிஷேகம் செய்ய தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது. ஐயப்ப சுப்ரபாதமும், ஹரிவராசனமும் பாடிய யேசுதாஸை கவுரவிக்கும் விதமாக நாளை நடைபெறும் இந்த சிறப்பு பூஜையில் அவர் பெயரில் கணபதி ஹோமமும், நீராஞ்சனமும் நடைபெறும். தொடர்ந்து நெய்யபிஷேகம் நடத்தப்பட்டு, பிரசாதம் அமெரிக்காவில் இருக்கும் யேசுதாஸுக்கு அனுப்பி வைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com