ஜிப்மரில் புதுவை மக்களுக்காக சிறப்பு ஏற்பாடு
JIPMER | Puducherry | ஜிப்மரில் புதுவை மக்களுக்காக சிறப்பு ஏற்பாடு
புதுச்சேரி மக்களுக்காக ஜிப்மரில் பிரத்யேக கவுன்ட்டர்
மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகள் மருத்துவ ஆலோசனைக்கான பதிவேடு பெற தனி கவுன்ட்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி தெரிவித்துள்ளார். புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வருவதால், புதுச்சேரியைச் சேர்ந்த நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை கிடைப்பதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து, புதுவையைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தனிக் கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜிப்மர் இயக்குநர் கூறியுள்ளார்.
Next Story
