விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் முயற்சி - வேகமெடுக்குமா இந்தியாவின் ககன்யான் திட்டம்?

விண்வெளி சுற்றுலா உலகளவில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், இந்தியாவில் அது சாத்தியமா? விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் வேகமெடுக்குமா?
விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் முயற்சி - வேகமெடுக்குமா இந்தியாவின் ககன்யான் திட்டம்?
Published on

விண்வெளி சுற்றுலா உலகளவில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், இந்தியாவில் அது சாத்தியமா? விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் வேகமெடுக்குமா? விளக்குகிறது, இந்த தொகுப்பு..அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விர்ஜின் நிறுவனத்தின் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான ரிச்சர்டு பிரான்சன், விண்வெளி சுற்றுலா என்ற தனது கனவுத்திட்டத்தை

செயல்படுத்திக் காட்டியுள்ளார்.நியூ மெக்சிகோவிலிருந்து விர்ஜின் நிறுவனத்தின் யுனிட்டி-22 விண்கலம், விஎம்எஸ் ஈவ் என்ற இரட்டை விமானம் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.இதில், விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீஷா உள்ளிட்ட 6 பேர் பயணம் செய்தனர்.இரட்டை விமானங்கள் சுமந்துசென்ற விண்கலம், குறிப்பிட்ட தொலைவு சென்றபின் விமானத்தில் இருந்து பிரிந்து, விண்வெளியை நோக்கி தனியாக பயணித்தது.88 கிலோ மீட்டர் தொலைவில் விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை குறைவாக உள்ள பகுதிக்குள் சென்றதும் விண்கலம் மிதந்தது. விண்கலத்தில் பயணித்த வீரர்கள் சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் விண்வெளி அனுபவத்தை உணர்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com