SouthernRailway | Parcel Train |இனி பார்சல்களை மட்டும் அனுப்ப தனி ரயில் - வரலாற்றில் இதுவே முதல்முறை
தெற்கு ரயில்வே சார்பில் முதன்முறையாக, பார்சல் அனுப்புவதற்காக அடுத்த மாதம் 12 ஆம் தேதி முதல் தனி ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி முதற்கட்டமாக, டிசம்பர் 12 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து புறப்படும் பார்சல் ரயில், டிசம்பர் 13 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை ராயபுரம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் மறுமார்க்கத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கு சென்னை ராயபுரத்தில் இருந்து புறப்படும் பார்சல் ரயில், மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு மங்களூரு சென்றடையும் என தகவல் வெளியாகியுள்ளது.சென்னை-மங்களூரு இடையிலான இந்த பார்சல் ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணனூர் உட்பட 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 23 டன் பார்சல்களை ஏற்றலாம் என்றும், ரயில்வே துறையால் அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.இதனை கண்காணிப்பதற்கு சென்னை ராயபுரத்தில் தனிக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
