``விரைவில்''.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய மெசேஜ்
அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகளை ஏவும் நிலையை எட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
தேசிய விண்வெளி தின கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர்,
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடாக இந்தியா மாறியது புதிய வரலாற்றை உருவாக்கியதாக குறிப்பிட்டார்.
விண்வெளியில் டாக்கிங்-அன்டாக்கிங் திறன்களைக் கொண்ட உலகின் நான்காவது நாடாகவும் இந்தியா மாறியுள்ளது....
குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்தில் மூவர்ணக் கொடியைக் காட்டியபோது அந்த நிகழ்வு ஒவ்வொரு இந்தியரையும் பெருமையால் நிறைத்தது என்று தெரிவித்தார்.
செமி-கிரையோஜெனிக் என்ஜின்கள் மற்றும் மின்சார உந்துவிசை போன்ற திருப்புமுனை தொழில்நுட்பங்களில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது....
இந்திய விஞ்ஞானிகளின் அயராத முயற்சிகளால் இந்தியா விரைவில் ககன்யான் திட்டத்தைத் தொடங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வரும் ஆண்டுகளில், இந்தியா அதன் சொந்த விண்வெளி நிலையத்தையும் உருவாக்கும்....
ஏற்கனவே சந்திரனையும் செவ்வாய் கிரகத்தையும் அடைந்துவிட்டது....
இப்போது விண்வெளியின் ஆழமான பகுதிகளை ஆராய வேண்டும் என்று தெரிவித்தார்.
அடுத்த 5 ஆண்டுகளில், ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகளை, அதாவது வாரம் ஒருமுறை ஒரு ராக்கெட் ஏவும் நிலையை நாம் எட்ட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
