பணத்திற்காக தந்தை கால்களை கட்டி அடித்த மகன்கள்

x

பணத்திற்காக தந்தையின் கால்களை கட்டிய மகன்கள், அவர் நெஞ்சின் மீது அமர்ந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியை சேர்ந்த 62 வயதாகும் பிரதிபால் சிங் என்பவர், டி.எஸ்.பி.யாக பணியாற்றி, ஓய்வு பெற்று தனியாக வசித்து வருகிறார். ஓய்வு பணம் 20 லட்சத்தை கேட்டு, அவரது வீட்டிற்கு சென்ற மகன்கள், தந்தையின் கால்களை கட்டி, நெஞ்சின் மீது அமர்ந்து தாக்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்