தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு மகன் தற்கொலை

x

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

மதுராவில் உள்ள கெளர் நகர் காலனி பகுதியில் தந்தை சுரேஷ் சந்திர அகர்வால் மற்றும் மகன் நரேஷ் அகர்வால் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தையை மகன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். அத்துடன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நரேஷை மது அருந்த வேண்டாம் என சுரேஷ் தடுத்ததால் இப்பிரச்சினை நிகழ்ந்துள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்