Snow | Farmers | பெரும் சிக்கல்.. ஏக்கர் கணக்கில் கருகி அழியும் பயிர்கள்.. விவசாயிகள் கண்ணீர் -
கேரள மாநிலம் மூணாறில் கடும் பனிப்பொழிவால் செடியிலேயே தேயிலை கருகுவது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் தேயிலை செடி கருகி பாழாய் போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 3 ஆண்டுக்கு முன்பு இதே போன்ற நிலைமை ஏற்பட்ட நிலையில், மீண்டும் பனிப்பொழிவு அதிகரிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Next Story
