Snake | Keralam | 3 நாட்களில் 54 பேரை கடித்த பாம்புகள் - குலை நடுங்க விட்ட செய்தி
Snake | Keralam | 3 நாட்களில் 54 பேரை கடித்த பாம்புகள் - குலை நடுங்க விட்ட செய்தி
கேரளாவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, கடந்த மூன்று நாட்களில் மட்டும் 54 பேரைப் பாம்பு கடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளிர்ச்சியைத் தேடி பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து வருவதால், நேற்று ஒரே நாளில் ஒரு குழந்தை உட்பட 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்பு கடி எதிர்ப்பு மருந்துகளைக் கையிருப்பில் வைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் இரவு நேரங்களில் விழிப்புடன் இருக்கவும், பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
