கடப்பா அருகே பேருந்துக்குள் புகுந்த பாம்பு

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே பொதட்டூரில் பேருந்துக்குள் பாம்பு புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்
கடப்பா அருகே பேருந்துக்குள் புகுந்த பாம்பு
Published on
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே பொதட்டூரில், பேருந்துக்குள் பாம்பு புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்த மாநில அரசு பேருந்து கடப்பாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று குறுக்கே வந்துள்ளது. பாம்புக்கு வழிவிட்டு பேருந்தை நிறுத்திய நிலையில், பாம்பு இன்ஜின் வழியாக பேருந்துக்குள் புகுந்துள்ளது. இதனால், பதற்றமடைந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக பாம்பு பிடிப்பவரை வரவழைத்து பாம்பை பிடித்தனர். பயணிகள் வேறு பேருந்துக்கு மாற்றப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரம் தாமதமாக பேருந்து புறப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com