Smiriti Mandhana Palash Mucchal | ஸ்மிருதிக்கு துரோகம் செய்தாரா காதலர்? - தீயாய் பரவும் `உரையாடல்'
ஸ்மிருதி மந்தனாவுக்கு துரோகம் செய்தாரா காதலர்? - வெடித்த சர்ச்சை
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா திருமணம் செய்யவிருந்த இசையமைப்பாளர் பலாஷ் முச்சல், வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பேசியதாக கூறப்படும் ஸ்கீர்சாட் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் இந்திய அணி, மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றினார். இவரும் பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்க இருந்தது. பிறகு ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், திருமணம் ஒத்திவைக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேரி டி கோஸ்டா Mary D Costa என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், பலாஷ் முச்சலுடன் சாட்டிங்கில் நெருக்கமாக நடத்திய உரையாடல்களை பகிர்ந்துள்ளார். ஒரு வேளை திருமணம் நின்றதற்கு இது தான் காரணமா என, தற்போது ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர்.
