இந்தியாவில் சிக்கிய ISIS பயங்கரவாத அமைப்பின் ஸ்லீப்பர் செல்கள்
வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஐஎஸ் ஐஎஸ் அமைப்பின் ஸ்லீப்பர் செல் நபர்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைதுசெய்துள்ளர். 2023 ஆம் ஆண்டு புனேவில் வெடிகுண்டுகளை தயாரித்து சோதனை செய்தது தொடர்பான வழக்கில் அப்துல்லா ஃபயாஸ் மற்றும் தல்ஹா கான் ஆகியோர் NIA-வால் தேடப்பட்டு, தலைமறைவாக இருந்தனர்.
இந்நிலையில் இந்தோனேஷியாவில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்குவந்த இவர்களிடம் குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகள் என தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைதுசெய்யப்பட்டு NIA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
