பிரபல நடிகைக்கு ஒற்றை ஆபாச மெசேஜ் - VIP-யின் அரசியல் வாழ்க்கையே வாஷ்-அவுட்
பாலியல் புகார்...கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து சஸ்பெண்ட்
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கேரள எம்.எல்.ஏ. ராகுல் மாங்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தனக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக மலையாள நடிகை புகார் தெரிவித்த நிலையில், பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாங்கூட்டத்தில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவர் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ராகுல் மாங்கூட்டத்தில், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் மாங்கூட்டத்தில் எம்.எல்.ஏ.வாக தொடரும் நிலையில், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது
