இந்திய பெண் மீது பழிபோட்ட சிங்கப்பூர் ஹோட்டல் ஓனர் திடீர் மரணம்

x

இந்திய ஊழியர் மீது குற்றம் சாட்டிய சிங்கப்பூர் பெண் மர்ம மரணம்

இந்திய பெண் ஊழியர் ஒருவர் இழப்பீடு பெறுவதற்காக காயம் ஏற்பட்டதைப் போல் நடித்ததாக குற்றம் சாட்டிய சிங்கப்பூர் உணவக பெண் உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரின் ஹாலந்து கிராமத்தில் உள்ள சுமோ சாலட் என்ற உணவகத்தின் உரிமையாளராக இருந்தவர் ஜேன் லீ... இவர் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரான் கிரஞ்சீத் கவுர் என்ற பெண் ஊழியர், இழப்பீடு பெற வேண்டும் என்ற நோக்கில் பணியின் போது காயம் ஏற்பட்டதாக கூறி விண்ணப்பித்ததாகவும், ஆனால், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை இது அனைத்தும் நாடகம் என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். இதுகுறித்து அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், ஜேன் லீ மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இயற்கைக்கு மாறான மரணமாக வழக்கு பதிந்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்