பேறுகால விடுப்பை அதிகரித்த சிக்கிம் அரசு.. குழந்தை பிறந்ததும் ஆண்களுக்கும் விடுப்பு - சிங்கிள் பேரண்டுகளுக்கு அடித்த ஜாக்பாட்

x

பெண் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு பேறுகால விடுப்பை அறிவித்துள்ளது, சிக்கிம் மாநிலம். அதோடு, ஆண்களுக்கும் ஒரு மாத காலம் விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.

பேறுகால நலச் சட்டம் 1961-ன் படி, பெண்களுக்கு இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள மொத்தமாக ஆறு மாத காலம் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரை... அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் , தமிழக அரசை போல் தற்போது சிக்கிம் அரசும் மகப்பேறு கால விடுப்பை அதிகரித்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமான சிக்கிமின், மொத்த மக்கள் தொகை வெறும் 6 லட்சத்து 32 ஆயிரம் தான்.

இந்நிலையில், அங்கு மக்கள் தொகை அதிகரிக்க... இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் பெற்றோர், அரசு ஊழியர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கூடுதல் இன்கிரிமெண்ட் வழங்கப்படும் என அறிவித்திருந்தது, அம்மாநில அரசு.

இந்நிலையில், தற்போது அரசு பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறையை ஓராண்டு காலமாக உயர்த்தியுள்ளது. அதோடு, ஆண்களுக்கும் paternity leave-வாக ஒரு மாத காலம் விடுப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஹரியானாவிலும் அரசு ஊழியர்களுக்கு அம்மாநில அரசு 15 நாட்கள் paternity leave வழங்கி வருகிறது.

அதோடு, அம்மாநிலத்தில் சிங்கிள் பேரண்டாக உள்ள ஆண்... அதாவது மனைவியை இழந்து இல்லது மனைவியை பிரிந்து வாழும் ஆண்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள இரண்டு ஆண்டுகள் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளவும் ஹரியானா அரசு அனுமதிக்கிறது.

அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் சிங்கிள் பேரண்டாக உள்ள ஆண்கள்... தங்களுக்கு பிறந்துள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஆறு மாத காலம் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது.

கோவாவில் அரசு துறைகளில் ஒப்பந்தத்தின அடிப்படையில் பணி புரியும் பெண் ஊழியர்கள், ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொள்ள அம்மாநில அரசு அனுமதிக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இதுபோல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசு துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு அம்மாநில அரசு ஆறு மாத கால விடுப்பு வழங்குகிறது.

இதை தவிர்த்து, ஒரு குழந்தை பிறந்து உயிரிழந்தால், மத்திய அரசு துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் 60 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது, இந்திய அரசு.


Next Story

மேலும் செய்திகள்