உழைப்புக்கு ஊதியம் கேட்ட நபருக்கு நேர்ந்த கொடுமை.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ஜீப் கழுவியதற்கு பணம் கேட்ட சர்வீஸ் சென்டர் உரிமையாளர் மீது ஜீப்பை வைத்து மோதிவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் இஸ்மாயில் என்பவர் கார் கழுவும் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். அங்கு வந்த இளைஞர் ஒருவர் தனது ஜீப்பை கழுவுமாறு ஊழியர்களிடம் கூறியதை தொடர்ந்து பணியை முடித்த ஊழியர்கள் 800 ரூபாய் கேட்டுள்ளனர். பணம் அதிகமாக இருப்பதாக கூறி இளைஞர் உரிமையாளர் இஸ்மாயிலுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதோடு பணம் தர மறுத்து உரிமையாளர் மீது ஜீப்பை மோதிவிட்டு தப்பி சென்றார்.
Next Story
