Kerala Viral Video | உலுக்கிய `ரீல்ஸ்’ மரணம்.. மாற்றி யோசித்த கண்டக்டர்.. இதான் இப்போ செம வைரல்
கேரளாவில் அட்டைப் பெட்டி அணிந்து பேருந்தில் பணியாற்றிய நடத்துநர்
கேரளாவில் பெண் அளித்த பாலியல் புகாரால் மனமுடைந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பேருந்தில் அட்டை பெட்டியை கவசமாக அணிந்து நடத்துநர் பணியாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தீபக், பேருந்தில் பயணித்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்...
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து தீபக் தற்கொலை செய்துகொண்டது கேரளா மட்டுமன்றி, நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, தீபக் மீது போலியாக குற்றம்சாட்டியதாக பெண்ணை கைது செய்தனர்.
இந்த நிலையில் கேரளாவில் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாசகத்துடன் நடத்துநரே அட்டை பெட்டியை கவசமாக அணிந்து பேருந்தில் பணியாற்றியது பேசுபொருளாகியுள்ளது...
