இன்ஸ்டாகிராம் ஆண் நண்பரை நம்பி சென்னை வந்த சிறுமி அதிர்ச்சி சம்பவம்

x

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பரை நம்பி திருவண்ணாமலையில் இருந்து சென்னை வந்த 17 வயது சிறுமியை போலீசார் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் சிறுமியை சென்னைக்கு அழைத்ததை தொடர்ந்து, சிறுமி சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காத்திருந்தார். இதனையடுத்து ரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்திற்குள் அழைத்துச் சென்றுள்ளனர். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த நபர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு, இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்