போனை தட்டிவிட்ட ஊழியரை பீர் பாட்டிலால் மண்டையை உடைத்த நபர் -அதிர்ச்சி CCTV
மதுபான கடை ஊழியரின் தலையில் பீர் பாட்டிலால் அடித்த நபர்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மதுபான கடை ஊழியரின் தலையில் பீர் பாட்டிலை கொண்டு அடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொட்டாரக்கரை பகுதியில் உள்ள மதுபான கடையில், மது வாங்க வந்த இருவர் கடை ஊழியர்கள் மற்றும் மது வாங்க வந்தவர்களை செல்போனில் வீடியோ பதிவு உள்ளனர். இதை தடுத்த ஊழியர் ஃபைசலின் தலையில் பீர் பாட்டலை கொண்டு ஒருவர் தாக்கினார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய ரஞ்சித், ஜிம்சன் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story
