ரூ.3000-க்கு டீசல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஓட்டம் பிடித்த நபர்கள் -அதிர்ச்சி சிசிடிவி
கேரள மாநிலம் கொல்லத்தில், ஆடம்பர காரில் வந்த தமிழகத்தை சேர்ந்த நபர்கள் பெட்ரோல் பங்கில் மூவாயிரம் ரூபாய்க்கு டீசல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. புனலூரில் உள்ள செம்மந்தூர் பகுதியில் இயங்கும் பெட்ரோல் நிலையத்திற்கு, நெல்லையை சேர்ந்த 2 பேர் காரில் சென்றுள்ளனர். மூவாயிரம் ரூபாய்க்கு அவர்கள் டீசல் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமல், காரை வேகமாக எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்ததை தொடர்ந்து, காரை மடக்கிப் பிடித்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
