சபரிமலை சன்னிதானத்தில் போலீஸ் அதிகாரி செய்த காரியம் - பதவியே பறிபோனதால் அதிர்ச்சி
சபரிமலை சன்னிதான பகுதிக்குள் காலணி அணிந்து நின்ற போலீஸ் அதிகாரி, பணி நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஷ் என்ற போலீஸ் அதிகாரி, காலில் காலணி அணிந்து கொண்டு நின்றுள்ளார். இதனை செல்போனில் வீடியோ எடுத்த பக்தர்கள், சமூகவலைதளங்களில் வெளியிட்டு புனிதத்தை மீறியதாக குற்றம் சாட்டினர். இதையடுத்து போலீஸ் அதிகாரி ராஜேஷ் சபரிமலை பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, அங்கிருந்து முகாம் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டார்.
Next Story
