Puducherry | நம்ப வைத்து முதுகில் குத்தி ரூ.90 கோடிக்கும் மேல் மோசடி - புதுச்சேரியில் அதிர்ச்சி

x

புதுச்சேரி மற்றும் தமிழக கல்லூரி மாணவர்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி, 90 கோடிக்கு மேல் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, தனியார் பொறியியல் கல்லுாரியில் பயிலும் மாணவர்களான தினேஷ் மற்றும் ஜெயப்பிரதாப் ஆகியோர் தனது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த வங்கி கணக்குகள் மேற்கு வங்கம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் முடக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.. தொடர்ந்து நடந்த விசாரணையில், அதே கல்லூரியில் படிக்கும் மாணவரான கடலுாரை சேர்ந்த ஹரிஷ் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வங்கி கணக்கிற்கு தலா 2 ஆயிரத்து 500 தருவதாக கூறியுள்ளார். இதை நம்பி சக மாணவர்கள் ஹரிஷிடம் வங்கி கணக்கு தொடங்கியதோடு, சிம் கார்டு வங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.. இதையடுத்து ஹரிஷ், சென்னையை சேர்ந்த கணேசன் என்பவர் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர். இவர்கள் 500-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை பெற்று மோசடி செய்த பணத்தை கிரிப்டோவாக மாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து சொகுசு கார், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், நூற்றுக்கணக்கான வங்கி புத்தகங்கள், மொபைல்கள், லேப்டாப்கள், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்