வானில் தோன்றிய சிவலிங்கம் - பரவசத்தில் அண்ணாந்து பார்த்த PM மோடி

x

பிரசித்தி பெற்ற குஜராத் சோமநாதர் ஆலயத்தில் நடைபெற்ற பிரமாண்ட டிரோன் ஷோ பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

சோமநாதர் ஆலயத்தில் முகமது கஜினி படையெடுத்து ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், கோயில் கம்பீரமாக காட்சியளிப்பதை நினைவுகூரும் வகையில், பிரமாண்ட டிரோன் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் மோடி பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், 3 ஆயிரத்துக்கும் அதிகமான டிரோன்கள் சுமார் 15 நிமிடங்கள் வானில் வர்ணஜாலம் நிகழ்த்தின...

குறிப்பாக வானில் தோன்றிய சிவலிங்கம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது...

சிவபெருமானின் உடுக்கை வடிவில் டிரோன்கள் வானில் காட்சியளித்ததை பக்தர்கள் மெய்மறந்து வழிபட்டனர்...

தொடர்ந்து நவகிரகங்களுக்கும், சோமநாதர் ஆலயத்துக்கும் இடையிலான தொடர்பு, சிவபெருமானின் ருத்ர தாண்டவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டதை பிரதமர் மோடி உள்ளிட்டோர் இருகரம் கூப்பி வணங்கினர்

.

இறுதியாக சோமநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபடுவது போல அவரது உருவத்தையும் டிரோன்கள் காட்சிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது...


Next Story

மேலும் செய்திகள்