ஆசையாய் ஹனிமூன் கூட்டி சென்ற இடத்தில் கணவனை கதற கதற கதை முடித்த பெண்

x

ஆசையாய் ஹனிமூன் கூட்டி சென்ற இடத்தில் கணவனை கதற கதற கதை முடித்த பெண்

தேனிலவில் கணவனை கொன்ற மனைவி - திடுக் சம்பவம்

தேனிலவுக்குச் சென்ற இடத்தில் கணவனை மனைவியே கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர்கள் ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதி. புதுமன தம்பதியான இவர்கள் மேகாலயா மாநிலத்திற்கு தேனிலவுக்காக சென்றிருந்த நிலையில் மாயமானதாக அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் ராஜா ரகுவன்ஷியின் உடல் மட்டும் அங்குள்ள பள்ளத்தாக்கில் மீட்கப்பட்டது, ஆனால் சோனம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் உ.பி. போலீசில் சரணடைந்த சோனம் தனது கணவனை 3 பேர் கொண்ட கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளதாக தெரிவித்துளார். அவரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் கள்ளக்காதலா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்