குடிபோதை..? அதிவேகம்... டிரக் மீது பாய்ந்த முக்கிய அரசியல் புள்ளி மகனின் கார்..! - ஷாக் வீடியோ

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ஒன்று டிரக் மீது மோதியதில் 2 பேர் காயமடைந்தனர். காரை சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாண்டு கெய்க்வாட் என்பவரின் மகன் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்த போது பாண்டு கெய்க்வாட்டின் மகன் சவுரப் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுரப், டிரக் ஓட்டுநர் கிளீனர் ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்... இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்... புனேவில் இதுபோன்ற சொகுசு கார் விபத்துகள் அடிக்கடி அரங்கேறும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன...

X

Thanthi TV
www.thanthitv.com