Shampoo | Utharakhand | பிரபல நிறுவனம் பெயரில் போலி ஷாம்பு தயாரித்த கும்பல் கைது

x

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் போலி ஷாம்பு தொழிற்சாலை நடத்தி வந்த கும்பல், பிரபல நிறுவனத்தின் தயாரிப்பு ஷாம்புக்களை போலியான முறையில் தயாரித்து விற்பனை செய்து வந்தனர். இந்த கும்பலிடமிருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி ஷாம்புக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஹசீன் அஹமத், ஷபான், மோஹ்சின் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் போலி ஷாம்பு தொழிற்சாலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்