Shaji Purushothaman | தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு மீண்டும் பிடிவாரண்ட் - நீதிமன்றம் அதிரடி
தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ம் ஆண்டு சென்னை எழும்பூரில், மதுபோதையில் சொகுசு காரை ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில், 12 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில், மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது, உடல்நலக்குறைவு காரணமாக நேரில் ஆஜராக விலக்கு அளிக்கவும், காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்கவும் ஷாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நீதிமன்றம் நிராகரித்தது. தண்டனை விவரங்களை அறிவிக்க குற்றம் சாட்டப்பட்டவர் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறிய நீதிமன்றம், ஷாஜி புருஷோத்தமனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
