செஷல்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு - ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வரவேற்றனர்

ஷெசல்ஸில் உள்ள சிறிய தீவு ஒன்றில், கடற்படை தளம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது
செஷல்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு - ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வரவேற்றனர்
Published on
6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள, ஷெசல்ஸ் நாட்டு அதிபர் டேனி பவுரே-வுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடியை, அதிபர் டேனி பவுரே சந்தித்து பேசுகிறார். அப்போது இருநாட்டு உறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. ஷெசல்ஸில் உள்ள சிறிய தீவு ஒன்றில், கடற்படை தளம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com